திருக்கோவிலூர் அருகே உள்ள வெங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இன்பநிலா (23). இவர்களுக்கு தமிழ் செல்வன் (2) என்ற மகன் இருந்தான்.
இன்பநிலாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் கோபம் அடைந்த இன்பநிலா நேற்று இரவு தனது மகன் தமிழ் செல்வனுடன் வல்லம் படுகையில் உள்ள தனது தோழி வசந்தி யை பார்க்க புறப்பட்டார்.
சிதம்பரத்தில் இருந்து வல்லம் படுகைக்கு தனியார் பஸ்சில் சென்றார். வல்லம் படுகை அருகே உள்ள வேளக்குடி பஸ் நிறுத்தத்தில் அவர் பஸ்சை விட்டு இறங்கி அங்கிருந்து வல்லம் படுகைக்கு மகனுடன் நடந்து சென்றார்.
அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் இன்பநிலாவிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவர் வல்லம்படுகைக்கு செல்லவேண்டும் என்று கூறினார்.
உடனே அவர்கள் நாங்கள் கொண்டு விட்டு விடுகிறோம் என்று கூறி, இன்பநிலாவையும், அவரது மகனையும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர். திட்டுக்காட்டூர் அருகே சென்றபோது திடீரென்று அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இன்பநிலாவை கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர்.
அவர் கதறினார். உடனே அவர்கள் எங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என்று மிரட்டி தாக்கினார்கள். ஆனாலும் அவர் உடன்படவில்லை.
உடனே மர்ம மனிதர்கள் அங்கு அழுது கொண்டு நின்ற குழந்தை தமிழ்செல்வத்தை தூக்கி தரையில் ஓங்கி அடித்தனர். இதில் அவன் துடிதுடித்து இறந்தான். பின்னர் கொள்ளிடம் ஆற்றில் பிணத்தை வீசிவிட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தன்கண் எதிரே குழந்தை இறந்ததைப்பார்த்து இன்பநில கதறி அழுதார்.
இதுகுறித்து அண்ணா மலை நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட குழந்தை தமிழ் செல்வத்தை மீட்டனர். மர்ம மனிதர்களால் தாக்கப்பட்ட இன்பநிலாவை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை கொன்ற மர்ம மனிதர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
September 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- கள்ளக்காதலை கண்டித்த கணவரை முகத்தில் துணி வைத்து அழுத்தி கொலை
- கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு
- இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வம் !
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- கடலூர் அருகே ரூ.82 லட்சம் செலவில் சாலை சீரமைப்பு பணி; அய்யப்பன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாத்தியாப்பள்ளி தெரு சாலை...!
- கடலூர் அருகே பலத்த மழை: இடிதாக்கி செங்கல் சூளை தொழிலாளி பலி
- மின் கட்டணம் செலுத்த புதிய முறை
- சிதம்பரத்தில் பண்டிகையொட்டி கூட்ட நெரிசல் 1ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்
- எடியூரப்பாவின் கைது கட்சிக்கு அவமானம் – ஒப்புக்கொள்கிறார் அத்வானி
No comments:
Post a Comment