
புதுடில்லி : பாப்ரி மசூதி இடிப்பு குறித்த வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதனையடுத்து மாநிலத்தில் ஏற்படும் சட்டம் ஒழுங்கை சமாளிக்க 485 கம்பெனி மத்திய படைகள்(48,500 போலீசார்) தேவை என உத்திர பிரதேச அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து இந்த கோரிக்கை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், நிதியமைச்சர் பிரணாப் முகரஜி, பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோனி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment