Islamic Widget

August 26, 2010

பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமி பாதித்த மாணவர்களுக்கு செயல்முறை விளக்க நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செயல் முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாணவ,மாணவிகள் பரங்கிப் பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கரிக்குப்பம், கே.பஞ்சங்குப்பம் ஆகிய பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. ஐ.எப்.ஏ.டி., நிறுவன உதவியுடன் கடலூர் தீயணைப்புத் துறையினர் பேரிடர் தடுப்பு செய்முறை விளக்கங்களை செய்து காட்டினர். பின்னர் கடலூர் சில்வர் பீச்சில் சுனாமி போன்ற பேரிடர்களை தடுக்கவும், கரை அரிப்புகளை தடுப்பதற்கும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்தனர். தொடர்ந்து கடலூர் முதுநகரில் ஐஸ் உற்பத்தி தொழிச்சாலை, கடலூர் அருங்காட்சியகம், பாலூர் விதைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று விளக்கினர். நிகழ்ச்சியில் நிலைய அதிகாரி மதிவாணன், தலைமை ஆசிரியர் ரவி, கலிரோஜா, மற்றும் ஜெபாரத், சாமிநாதன், ரங்கநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment