Islamic Widget

August 26, 2010

ரசாயன பூச்சு வினாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் : ரசாயனம் பூசப்பட்ட வினாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டுள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வினாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து, பின்னர் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அண்மை காலமாக பிளாஸ்டர் ஆப் பாரிஸினால் செய்யப்பட்டு ரசாயன வர்ணம் பூசப்பட்ட வினாயகர் சிலைகளை, வழிபாட்டிற்கு பின்னர் கரைத்து வருகின்றனர். இதனால் நீர்நிலைகளில் மாசு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் களிமண்ணால் செய்யப் பட்ட வினாயகர் சிலைகளையும், ரசாயன கலவையற்ற சிலைகளை பயன்படுத்த வேண்டும். கடலோரம் மற்றும் ஏரிகளில் சிலைகளை கரைக்காமல் கடலில் 500 மீட்டர் தூரம் எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட் டுள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு, காவிரி பகுதிகளில் சிலைகளை கரைக் கும்படி கேட்டுக் கொள் ளப்படுகிறார்கள். வினாயகர் சிலைகளை பாரம்பரிய வழக்கப்படி, சுற்றுச் சூழலை பாதிக்காதவாறு கொண்டாடவேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment