கிள்ளை : தே.மு.தி.க., மாவட்ட துணை செயலாளரை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்த பின் னத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது அயூப் (44). தே.மு. தி.க., கடலூர் மாவட்ட துணை செயலாளர். இவரது குடும்பத்தினருக்கும் எதிர் வீட்டைச் சேர்ந்த பக்கீர் முகமது (60) குடும் பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த பக்கீர் முகம்மது பேத்தியின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைத்தும் முகம் மது அயூப் செல்லவில்லை. இதனால் பக்கீர் முகமது மகள் சுமையாபானு, திருமணத்திற்கு வராதது குறித்து அயூப்பை திட்டினார். இதுகுறித்து அயூப் ஜமாத் நிர்வாகத்தில் புகார் கொடுத்தார்.
ஆவேசமடைந்த பக்கீர் முகமது, ஜாபர் அலி (35), முகம்மது நபீஸ் (26) மற்றும் பரங்கிப் பேட்டை முத்தலீப் (30) ஆகியோர் அயூப் வீட்டில் புகுந்து பைப், உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். காயமடைந்த அயூப் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து பக்கீர் முகமது உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முத்தலீப்பை தேடி வருகின்றனர்.
August 29, 2010
தே.மு.தி.க., செயலாளர் தாக்கு சிதம்பரம் அருகே மூன்று பேர் கைது பரங்கிப்பேட்டை வாலிபரை போலீஸ் தேடி வருகின்றனர்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
No comments:
Post a Comment