
புதுடில்லி: உலக அளவில் இன்டெர்நெட்டை பயன்படுத்தும்நாடுகளின் வரிசையில் 7-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. உலக அளவில் இன்டெர்நெட்டை பயன்படுத்துவோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தும் காம்ஸ்கோர் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி முதலிடத்தில் அமெரிக்கா, சீனா 2-வது இடம், ஜெர்மனி 3-வது இடத்திலும்,ரஷ்யா 4-வது, பிரேசில் -5-வது, இங்கிலாந்து 6-வது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் இந்திய மக்கள் பயன்படுத்தும் இன்டெர்நெட் வரிசையில் பேஸ் புக் முதலிடத்திலும், ஆர்குட் 2-வது இடத்திலும், பாரத் ஸ்டூடண்ட் , டிவிட்டர் போன்றவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment