Islamic Widget

August 26, 2010

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமானத்தை தள்ளி செல்லும் வாகனத்தில் திடீர் தீ; 250 பயணிகளுடன் விமானம் தப்பியது

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு:
 
 விமானத்தை தள்ளி செல்லும்
 
 வாகனத்தில் திடீர் தீ; 
 
 250 பயணிகளுடன் விமானம் தப்பியதுசென்னையில் இருந்து லண்டன் செல்லும் விமானம் ஒன்று, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 251 பயணிகள் அதில் இருந்தனர்.


விமானம் புறப்படுவதற்கு முன்னர் அதனை ஓடு பாதைக்கு பின்னோக்கி தள்ளிச் செல் வதற்காக, வாகனம் ஒன்றை பயன்படுத்துவார்கள். ஜீப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த வாகனத்தை புஸ்சிங் வேக்கிள் என்று அழைப்பார்கள்.
 
லண்டன் விமானத்தை தள்ளிச் செல்வதற்காக இந்த தள்ளு வாகனம் கொண்டு வரப்பட்டது. விமானத்தை பின்னோக்கி தள்ளிச்சென்று ஓடு பாதையில் கொண்டு தள்ளு வாகனம் நிறுத்தியது.

அப்போது அதில் இருந்து திடீரென தீப்பொறிகள் பறந்து புகை வந்தது. உடனடியாக தீய ணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் 251 பயணிகளுடன் நின்று கொண்டிருந்த விமானம் அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் காரணமாக விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment