கடலூர் : சென்னைக்குச் சென்ற டேங்கர் லாரியில் இருந்து "சல்ஃயூரிக் ஆசிட்' தெறித்து சாலையில் சென்ற 3 பேர் காயமடைந்தனர்.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு "சல்ஃயூரிக் ஆசிட்' ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந் தது. கடலூர் அண்ணா மேம்பாலம் ஏறும்போது டேங்கர் லாரி ஆட்டம் போட்டதால் "ஏர் ஹோஸ்' வழியாக ஆசிட் தெறித்து அருகில் சாலையில் சென்றவர்கள் மீது பட்டது. இதனால் மூவருக்கு எரிச்சல் ஏற்பட்டு கொப்பளம் போட்டது. அச்சமடைந்த அவர் கள் 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனைக் குச் சென்று சிகிச்சை பெற்று சென்றனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment