புதுடெல்லி: சங்கரராமன் கொலை வழக்கில் இறுதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
காஞ்சி சங்கரமடம் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைப்பெற்று வருகிறது. கொலை வழக்கில் இறுதி விசாரணை செப்டம்பர் 5ம் தேதி நடைப்பெற இருந்தது. மேலும் காஞ்சி ஜெயேந்திர் நீதிபதியுடன் நடத்திய பணம் பேர டெலிபோன் பேச்சுகளும் தொலைக்காட்சிகளில் வெளியானது இந்நிலையில் இறுதி விசாரணை நடைபெறக்கூடாது என்று வழக்கறிஞர் சுந்தர்ராஜன் மனு தாக்கல் செய்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று வழக்கு இறுதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் ஊழல் கண்காணிப்பு ஆய்வாளர் 8 வாரத்தில் பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இவ்வழக்கில் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.
No comments:
Post a Comment