சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வேகத்தில் உயர்ந்து வந்தது. அடிக பட்சமாக ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக சென்றடு. மேலும் பண்டிகை மற்றும் விழாக்கள் வருவதால் தங்கம் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று முதல் தங்கம் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்தது. செவ்வாய்க்கிழமை ரூ.21 ஆயிரத்து 40க்கு விற்பனையான ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.20,792 ஆக இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 599க்கு விற்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) தங்கம் விலை மூன்றாவது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
இன்று ஏற்பட்ட சரிவு தங்கம் மார்க்கெட்டில் அதிக பட்சமான சரிவாகும் சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.2,464 ஆக இருந்தது. அதாவது கிராமுக்கு நேற்றை விட இன்று 135 ரூபாய் குறைந்தது. இதன் காரணமாக பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.19 ஆயிரத்து 712 ஆக உள்ளது.
தங்கம் விலை 20 ஆயிரம் ரூபாய்க்கும் விலை குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது தங்கத்தில் முதலீடு செய்து இருப்பவர்களுக்கு இந்த அதிரடி விலை வீழ்ச்சி பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
No comments:
Post a Comment