புதுடெல்லி:அன்னா ஹஸாரே மதசார்பற்றவராக இருந்தால் முஸ்லிம்களை ஏன் அவருடைய குழுவில் இடம்பெற செய்யவில்லை என டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் செய்யத் அஹ்மத் புகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதவாதம்தான் ஊழலை விட தேசத்திற்கு அச்சுறுத்தலானது. மதவாதத்தை குறித்து ஹஸாரே வாயை திறப்பதில்லை. ஹஸாரே அவரின் பின்னணியில் செயல்படும் அரசியல் சக்தியிடமிருந்து விடுபடவேண்டும்.
குஜராத்தில் முஸ்லிம்களை கூட்டுப் படுகொலைச் செய்வதற்கு தலைமை வகித்த நரேந்திரமோடிக்கு புகழாரம் சூட்டியவர்தாம் ஹஸாரே.
முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு வந்தேமாதரம், பாரத் மாதா கீ ஜெய் போன்ற முழக்கங்கள் எதிரானதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தில் தேசத்தை வணங்கச் சொல்லவில்லை. சில முஸ்லிம்கள் ஹஸாரேவின் போராட்டத்தில் பங்கு பெற்றாலும் கூட அவர்கள் நாட்டின் 25 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அல்லர். இவ்வாறு டெல்லி இமாம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment