Islamic Widget

April 30, 2011

பரங்கிப்பேட்டையில் மாலை 4 to 6 மின்சாரம் நிறுத்தப்படும்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பு.முட்லூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறப்படும் பகுதிகளில் இது நாள் வரை பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. நாளை (01-05-2010) முதல், நேரம் மாற்றப்பட்டு மாலை 4 மணி முதல் மாலை 6 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என சிதம்பரம் கோட்ட செயற்பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை கணணிமயமாக்கப்பட்ட பரங்கிப்பேட்டை தபால் நிலையத்தில் செலுத்தலாம் என்றும் இதற்கான சேவைக் கட்டணம் ரூ.5 மட்டும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


source: dinamalar

No comments:

Post a Comment