பரங்கிப்பேட்டை: டெங்கி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் பரங்கிப்பேட்டைபேரூராட்சி மன்ற வளாகத்ததில் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் முஹம்மது யூனுஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்பு கூட்டத்தில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ பங்கேற்று விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசினார்.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கொசு உற்பத்திக்கு சாதகமான அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் நீர் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் வீட்டை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தால், டெங்கி காய்ச்சல் வராது. பரங்கிப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஓரளவு அகற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் கிடக்கும் இடங்களில் தான் டெங்கி காய்ச்சல் அதிகமாக வரும் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் டெங்கி காய்ச்சல் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத்தினர் எடுத்துக் கொண்டனர்.
நன்றி: pnoexpress.
நன்றி: pnoexpress....???? புகைப்படங்கள் அனைத்தும் MYPNO.COM உடையது அதனாலே நன்றி MYPNO னு போடுங்கஸார்
ReplyDelete