
டெல்லி திரும்ப ஒப்படைக்கும் 1,721 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
இதுகுறித்து டெல்லி திரும்ப ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை வேறு சில மாநிலங்களும் வழங்க கோரிக்கை வைத்திருப்பதால் அதனை தமிழகத்துக்கு வழங்க இயலாது என மத்திய அரசு சார்பில் வாதிடப் பட்டது.
இந்நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
No comments:
Post a Comment