பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே சசி தொண்டு நிறுவனம் சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. சிதம்பரம் அடுத்த திட்டுக்காட்டூர் கடந்த மழை, வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு பரங்கிப்பேட்டை சசி தொண்டு நிறுவனம் சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவிற்கு தொண்டு நிறுவன இயக்குனர் ரமேஷ்நாதன் தலைமை தாங்கினார்.
இணைந்த கைகள் மகளிர் கூட்டமைப்பு பொருளாளர் கன்னியம்மாள் வரவேற்றார். தமிழரசி, இந்திரா, தேவி முன்னிலை வகித்தனர். புதிய வீடுகளை கிறிஸ்டியன் எய்டு இந்திய இயக்குனர் ஆனந்தகுமார் திறந்து வைத்து பயனாளிகளிடம் சாவியை ஒப்படைத்தார். விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோசஸ் சாமுவேல், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கரிகால்வளவன், ஞானசேகரன், சிவக்குமார், ஜெயபாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
source: dinamalar

No comments:
Post a Comment