சிதம்பரம் : சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதி ஓட்டுகள் எண்ணப்படுவதை நேரிடையாக கண்காணிக்க மேஜைக்கு ஒன்று வீதம் 32 "வெப் கேமராக்கள்' பொருத்தப்படுகிறது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய மூன்று தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சி.முட்லூர் அரசு கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி ஓட்டு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள், ஓட்டு எண்ணும் மையத்தில் கையாள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் திருச்சியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சீத்தாராமன் தலைமையில் 9 தொகுதிகளில் தேர்தல் அலுவலர்கள், தலைமை உதவி தேர்தல் அலுவலர், தலைமை பயிற்சியாளர் ஆகியோர் பங்கேற்றனர். ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு திருச்சியில் பயிற்சி பெற்ற அதிகாரிகளால் விரைவில் அந்தந்த பகுதியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி தொகுதிகளின் ஓட்டு எண்ணும் முட்லூர் கல்லூரியில் தடுப்பு கட்டைகள் கட்டும் பணி நடக்கிறது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கு 10 மேஜைகள் வீதமும், புவனகிரிக்கு 12 மேஜைகளும் போடப்பட்டு ஓட்டுகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு மேஜைக்கும் தலைமை தேர்தல் அலுவலக நேரடி கண்காணிப்பில் இருக்க ஒவ்வொன்றுக்கும் ஒரு "வெப் கேமரா' வீதம் மொத்தம் 32 கேமராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிதம்பரம் தேர்தல் அலுவலரும், ஆர்.டி.ஒ., வுமான இந்துமதி மேற்பார்வையில் ஓட்டு எண்ணும் மையத்தில் ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
source: dinamalar

No comments:
Post a Comment