Islamic Widget

May 01, 2011

கடலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டுகோள்

கடலூர் : கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லவேண்டும் என குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மருதவாணன், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு : கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தி நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளோம்.
 ஆனால், இதுவரை தென்னக ரயில்வே இதற்கான நிரந்தர ஏற்பாடுகளை செய்யவில்லை. அதிகார முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட தலைநகராக இருக்கும் கடலூரில் இந்த அகல ரயில்பாதை மக்களுக்கு பலன் அளிக்காத ஒரு திட்டமாக மாற்றப்பட்டிருப்பதை கடலூர் மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக முன்பு இயங்கிய ரயில்களுடன் அனைத்து விரைவு ரயில்களும், கடலூரில் உள்ள இரு ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment