Islamic Widget

May 01, 2011

பரங்கிப்பேட்டை : சுயேச்சை வேட்பாளருக்கு கொலை மிரட்டல்

பரங்கிப்பேட்டை : குறிஞ்சிப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளருக்கு மொபைல் போன் மூலம் வரும் கொலை மிரட்டல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த தீர்த்தனகிரியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். குறிஞ்சிப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளர்.
 இவர் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ததில் இருந்து அவரது மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், அவரை கொலை செய்து விடுவதாக தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

source: dinamalar

No comments:

Post a Comment