Islamic Widget

May 01, 2011

புவனகிரி பஸ் நிலையம் எதிரில் நள்ளிரவு தீ விபத்தால் பரபரப்பு

புவனகிரி : புவனகிரி பஸ் நிலையம் எதிரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. புவனகிரி பஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பாபுகான். இவரது வீட்டின் ஒருபுறம் கீழ்புவனகிரியைச் சேர்ந்தவர் பரசுராமன் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கடையின் பின்புறம் உள்ள ஓட்டு வீட்டின்மேல் இருக்கும் மின் கம்பியில் மின்பொறி ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் பாபுகான் வீட்டின் பின்புறமுள்ள வீடு முழுவதும் எரிந்து சாம்பாலனது. தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர். இவ்விபத்தில் பரசுராமனின் கடையிலிருந்த மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு 20 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

source: dinamalar

No comments:

Post a Comment