அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அதிபர் ஒபாமா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் விடுதியில் பின்லேடன் தங்கி இருந்தபோது அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ தாக்குதலில் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளது.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் தொடரும் என்று ஒபாமா அறிவித்துள்ளார்.
பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்தது கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது என்றும் சிஐஏ அதிகாரிகள் பின்லேடனின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.தனது உத்தரவை அடுத்து பின்லேடன் மறைவிடத்தில் சிஐஏ தாக்குதல் நடத்தினர் என்று கூறிய ஒபாமா, இந்த தாக்குதலில் அமெரிக்க தரப்பினருக்கு சில காயம் கூட ஏற்படவில்லை என்றார்.2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்குதலில் தொடர்புடைய ஒசாமா பின்லேடன் 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் தேடப்பட்டு வந்தவர் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
source: webdunia
No comments:
Post a Comment