உம்ரா, ஹஜ்ஜு, மற்றும் சுற்றுலா / தற்காலிக விசாக்களில் வந்து அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் சட்டவிரோதமாக தங்கிவிட்ட வெளிநாட்டவர்களை வெளியேற்ற கடந்த செப்டம்பர் 25 முதல் ஆறுமாதகாலத்திற்கு சவூதி அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருந்தது.
இவ்வருடம் (2011) மார்ச் 23 ஆம் தேதியுடன் முடிவடைந்த இப்பொதுமன்னிப்புக் காலம் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு இவ்வருடம் செப்டம்பர் 14 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று ரியாத்திலுள்ள சவூதி உள்துறை அமைச்சக அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மார்ச் 23 ஆம் தேதியுடன் முந்தைய பொது மன்னிப்பு அறிவிப்பு முடிவுக்கு வந்துவிட்டாலும், மேலும் பல வெளிநாட்டவர்கள் குறிப்பிட்ட காலத்தில் வெளியேற இயலாது போனதைக் கருத்தில்கொண்டு இக்கால அளவு மேலும் நீட்டிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.இவ்வாய்ப்பை சட்டவிரோத குடியேறிகள் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.இதன்பிறகும் சட்டத்தை மீறி தங்கிவிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

No comments:
Post a Comment