கடலூர்:வங்கக் கடலில் உருவான "ஜல்' புயல் காரணமாக கடலூர் மாவட்டத் தில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.சென்னைக்கு வடக்கில் கடந்த 4ம் தேதி மையம் கொண்டிருந்த "ஜல்' புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று முன்தினம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று அதிகாலை 4.30 மணி முதல் லேசான மழை பெய்யத் துவங்கியது. புயல் நெருங்க நெருங்க மழை அதிகரித்தது.
நேற்று காலை 11 மணிக்கு மழை தீவிரமடைந்து கனமழை கொட்டித் தீர்த்தது.தொடர்ந்து ஒன்னரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை கொட்டியது. கனமழையின் போது மரங்கள் காற்றின் வேகத் தால் பேயாட்டம் ஆடின. உயர்ந்து வளர்ந்த மரங்களும், சிறிய அளவிலான மரங்களும் முறிந்து விழுந்தன.சாலையில் டிஜிட்டல் போர்டுகள் விழுந்து சேதடைந்தன. இதனால் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இந்த கனமழையினால் கடலோர கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங் கியது. கடலோரப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மூழ்கின.இதற்கிடையே கடலில் சீற்றம் அதிகரித்து கடந்த 2 நாட்களாக கடல் நீர் கிராமப் பகுதிகளில் புகுந்து வருகிறது.
அமாவாசை, ஹைடைட் ஆகியவை ஒன்றாக சேர்ந்ததால் கடல் நீர் அதிகளவு ஆறுகளில் வெளியேறி நிரம்பியது. அத்துடன் நேற்று பகல் பொழுதில் பெய்த கனமழை நீரும் சேர்ந்து தாழ் வான பகுதிகள் யாவும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.கடலூர் அருகே உள்ள சுபா உப்பலவாடி, கண்டக் காடு ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டு வரும் மேம் பாலம் தாமதமாகி வருவதால் ஏற்கனவே உள்ள தரைப்பாலத்தின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் சுபாஉப்பலவாடி, கண்டக்காடு, தாழங் குடா ஆகிய கிராம மக்கள் தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேற்று ஞாற்றுக்கிழமையாதலால் கிராமப்பகுதிகளுக்கு செல்லும் டவுன் பஸ்கள் குறைவாகவே விடப்பட்டன. சில கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ.,ல் வருமாறு:கடலூர் 27.70, வானமாதேவி 13, பரங்கிப் பேட்டை 10, அண்ணாமலை நகர் 8.80, குப்பநத்தம் 7, பண்ருட்டி 7, புவனகிரி 6, சிதம்பரம் 6, சேத் தியாத்தோப்பு 6, கொத்தவாச்சேரி 5, லால்பேட்டை 5, கட்டுமன்னார் கோவில் 4.40, விருத்தாசலம் 2.20, பெலாந்துறை 2 மி.மீ., மழையும், காட்டுமைலூர், கீழ்செருவாய், லக்கூர், மே.மாத்தூர், ஸ்ரீமுஷ் ணம், தொழுதூர், வேப்பூர் ஆகிய இடங்களில் மழை சிறிதும் பெய்யவில்லை.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: கனமழை காரணமாக மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கினர். தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு வெளியூர்களிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்தவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைஇடைவிடாமல் பெய்து வரும் மழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தின் பல பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இன்று விடுமுறை அறிவித்துள்ளது.
Source: Dinamalar photos pno.news
November 08, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- வாத்தியாப்பள்ளி ரமழான் மாத இப்தார் நிகழ்ச்சிகள்.
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- குஜராத்தில் நரேந்திர மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்.
- தி.நகரில் சீல் வைத்த கடைகளை தற்காலிகமாக திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
- ரெட்டியூரில் பள்ளிவாசல் திறப்பு
புகைப்படம் நன்றி;http://portonovonews.blogspot.com என முழுமையான முகவரி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteபுகைப்படம்த்கு நன்றி;http://portonovonews.blogspot.com
ReplyDelete