லால்பேட்டை (05/11/2010) வெள்ளிகிழமை : லால்பேட்டையில் இருந்து இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்கு தனியார் டூரிஸ்ட் நிறுவனங்கள் மூலம் செல்ல இருந்த அனைத்து ஹஜ் பயணிகளின் பயணம் திடிரென்று இன்று ரத்தானது என்று அறிவிப்பு வெளியானதுஅதிர்ச்சியும், வேதனையும் :
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக நமதூர் , சிதம்பரம், ஆயங்குடி, புங்கனூர், பின்னத்தூர் மற்றும் கொள்ளுமேட்டை சேர்ந்தவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து பணமும் செலுத்திய நிலையில், இன்று ஹஜ்ஜுக்கு புறப்பட்டு செல்ல வேண்டியவர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தரும் விதமாக இந்த விசா கிடைக்கத செய்தி கிடைத்தது , இதனால் அனைவருக்கும் மிகுந்த வருத்தமடைந்தர்கள்.
நாங்கள் முழு பணமும் செலுத்தியும் எங்களுக்கு விசா வராததற்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதனால் பாதிப்படைந்த லால்பேட்டை,புங்கனூர், பின்னத்தூர் மற்றும் பல ஊரை சேர்ந்தவர்கள் ஜும்மா தொழுகைக்கு பிறகு தனியார் டூரிஸ்ட் நிறுவனத்தின் பிரதிநிதியாக இயங்கி வந்த ஹாஜி பதஹுதீன் அவர்களிடம் கேட்க வந்தார்கள், இதில் பேச்சு முற்றி ஒரு கட்டத்தில் கை கலப்பகிவிட்டது பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து சமாதானம் செய்தனர்.
ஒரு சில நாட்களுக்கு முன்பு சொல்லி இருந்தால் நாங்கள் இவ்வளவு ஏற்பாடுகள் செய்திருக்கமாட்டோமே என்று பாதித்த நபர்கள் கூறினார்கள்.
பல டூரிஸ்ட் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் விசா கிடைக்காதது நாம் அறிந்ததேஇது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க தமிழக அரசும் மாநில அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனால் ஹஜ் செல்ல இருக்கும் பயணிகளுக்கு ஏமாற்றங்கள் இல்லாமல் இருக்கும் என்பதே அனைத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் கோரிக்கையாகும்.
இதனால் புனித ஹஜ் பயணம் செல்ல முடியாமல் மனதளவிலும் உடலளவிலும் வருத்தமடைந்து அனைவரின் மன அமைதிகாகும், உடல் ஆரோக்யத்திர்க்காகும் எல்லாம் வல்ல அல்லாஹ் விடம் நாம் து ஆ செய்வோமாக ஆமீன்….. ஆமீன்…
November 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Quran Kareem TV Makkah
- பாஸ்போர்ட் பெற புதியமுறை: கலெக்டர் அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம் !
- சவூதி: மனைவியை அடித்தவருக்கு நூதன தண்டனை
- இறப்புச் செய்தி
- டீசன்ட்டா டிரஸ் பண்ணிட்டு வாங்க... ஆசிரியைகளுக்கு தமிழக அரசு திடீர் உத்தரவு!
- வாத்தியாப்பள்ளி ரமழான் மாத இப்தார் நிகழ்ச்சிகள்.
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- இரவு நேர ஹோட்டல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு?
- பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
- தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ: 47 பேர் பலி
No comments:
Post a Comment