Islamic Widget

November 06, 2010

கடலூர் மாவட்டத்தில் 18 தீ விபத்துமழையால் தப்பியது குடிசை வீடுகள்

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் தீபாவளி கொண்டாட்டத் தில் பட்டாசு வெடித்ததில் 18 இடங்களில் சிறிய அளவிலான தீவிபத்து ஏற்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் பல இடங்களில் குடிசை வீடுகள் தீ பிடித்து எரிந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். கடந்தாண்டு பண்ருட்டியில் 20 இடங்களிலும், கடலூரில் 19 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் தீபாவளி அன்று தீ விபத்து ஏற்பட்டது.
இந்தாண்டு தீபாவளி கொண்டாட் டத்தின் போது விபத்தை தடுக்கும் பொருட்டு தீயணைப்பு துறை சார் பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு விபத்தின்றி தீபாவளி கொண்டாடுவது, பாதுகாப் பாக பட்டாசு வெடிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், கடந்த 3ம் தேதி முதல் குடிசைகள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும், பட்டாசு விற்பனைகள் அதிகம் நடைபெறும் நகர பகுதிகளில் நகராட்சி தண்ணீர் வண்டிகளுடன் தீயணைப்பு வண்டிகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.இருந்தும் கடந்த 4ம் தேதி இரவு குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், சிதம் பரம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும், பண்ருட்டியில் இரண்டு இடத்திலும் பட்டாசு மற் றும் ராக்கெட் பட்டாசு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை பண்ருட்டியில் 5, நெல்லிக்குப்பத்தில் 3, விருத்தாசலத்தில் 2 இடங்களிலும், மங்கலம் பேட்டை, பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய இடங்களில் தலா ஒரு இடத்திலும் தீவிபத்து ஏற் பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மொத்தம் மாவட்டத்தில் 18 இடங்களில் தீவிபத்து ஏற்பட் டுள்ளது.தீயணைப்பு துறையினரின் முன் னெச்சரிக்கை நடவடிக்கையினாலும், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.


Source: Dinamalar

No comments:

Post a Comment