Islamic Widget

November 06, 2010

போதை ஆசாமிகள் ஓட்டி வந்த10 பைக்குகள் பறிமுதல்

கிள்ளை:குடித்து விட்டு பைக் ஓட்டிய 10 பேரின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.தீபாவளியை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு கிள்ளை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் கிள்ளை சாலையில் பைக்கில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.இதில் குடித்து விட்டு பைக் ஓட்டி வந்த 10 பேரின் பைக்குகளை பறிமுதல் செய்தனர். அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து குடித்து விட்டு பைக் ஓட்டி வந்தவர்களிடம் தலா 1500 ரூபாய் அபராதம் விதித்ததுடன், மேலும் அவ்வாறு நடந்து கொண்டால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து விடுவதாக எச்சரித்து அனுப்பினர்.


Source: Dinamalar

1 comment:

  1. போதை தெளிந்து இருக்கும்?!

    ReplyDelete