Islamic Widget

August 08, 2010

ஆஸ்டன் மார்ட்டின் கார் இந்தியா வருகிறது


புதுடெல்லி : ஜேம்ஸ்பாண்ட் படங்களில் சேசிங் சீன்களில் கலக்கும் இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்டன் மார்ட்டின் சொகுசு கார்கள் நம்நாட்டில் விரைவில் அறிமுகமாகின்றன.

இங்கிலாந்தை சேர்ந்த சொகுசு கார் நிறுவனம் ஆஸ்டன் மார்ட்டின். அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட முன்னேறிய நாடுகளின் வழுவழு சாலையில் கிறீச்சிட்டபடி மணிக்கு 100 கி.மீ. வேகத்துக்கு மேல் பறக்கும். சொகுசு வசதிகள் கொண்ட இந்த கார்கள், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் உட்பட ஹாலிவுட் திரைப்படங்களில் அதிகம் வலம் வருகின்றன.

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இங்கும் தனது மாடல்களை அறிமுகம் செய்ய ஆஸ்டன் மார்ட்டின் முடிவு செய்துள்ளது.

இதற்காக மும்பையை சேர்ந்த இன்பினிடி கார்ஸ் நிறுவனத்துடன் ஆஸ்டன் மார்ட்டின் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு சொகுசு கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ&வின் கார்களை இன்பினிடி கார்ஸ் விற்பனை செய்கிறது. ஆஸ்டன் மார்ட்டின் கார்களுக்கும் டீலராக அது ஒப்புக் கொண்டுள்ளது. ஆஸ்டன் மார்ட்டின் காருக்கான முன்பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. முதல் கட்டமாக வி8 வான்டேஜ், டிபி9, ரேபிட், டிபிஎஸ் ஆகிய 4 மாடல்களை இந்தியாவில் விற்க உள்ளது.

அவற்றின் விலை ஸி1.35 கோடி முதல் 2.85 கோடி வரை. தவிர இன்சூரன்ஸ், பதிவு கட்டணம், வரிகள் தனி. எனவே, கார் விலை ஸி3 கோடியை தொடும்.

No comments:

Post a Comment