Islamic Widget

August 09, 2010

மும்பையில் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு : 300 கண்டெய்னர்கள் கடலில் கவிழ்ந்தது


மும்பை துறைமுகம் அருகே இரண்டு கப்பல்கள் மோதியதால் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை கடல் பகுதி மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கலிஜா என்ற கப்பல் பராமரிப்பு பணி காரணமாகக் கடந்த இருவாரங்களாக மும்பை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நின்று கொண்டிருந்த இந்த கப்பல் மீது கடந்த சனிக்கியழமையன்று எம்.எஸ்.சி., சித்ரா என்ற கப்பல் நேற்று மோதியது. இந்த மோதலால் இரு கப்பல்களும் கடும் சேதம் அடைந்தன. இதில் சித்ரா கப்பலில் இருந்த எண்ணெய் நிறைந்த கண்டெய்னர்கள் 300 கடலில் கவிழ்ந்து விட்டன. மும்பை கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் மிதந்துகொண்டிருக்கும் இந்த கண்டெய்னர்களில் இருந்து எண்ணெய் கசியத் தொடங்கியுள்ளது. கடலில் எண்ணெய் வேகவேகமாகப் பரவி வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அந்தக் கண்டெய்னர்களை மீட்கவும் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. மும்பை கடல்பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டம் : எண்ணெய்க் கசிவை நிறுத்துவது குறித்து இன்று மகாராஷ்டிராவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்தவும், கண்டெய்னர்களை மீ்ட்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் அசோக் சவான் தெரிவித்தார். கடற்படை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்கிடையில் கண்டெய்னர்களில் இருந்து கசிந்து எண்ணெய் வேகமாக கடலில் கலந்து வருவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே எண்ணெய் கசிவு நிறுத்தப்பட்டதாகவும், கப்பல் படை எண்‌ணெய் கசிவை நிறுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment