Islamic Widget

October 26, 2012

30-வருட சொந்த சேமிப்பில் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட தம்பதியினர்!

மெக்கா:தங்களது திருமணம் நடந்த தினத்திலிருந்து சேமிக்கத் தொடங்கி 30 வருடங்கள் சொந்தமாக சேமித்து ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து மெக்காவிற்கு சென்றுள்ளனர் ஒரு தம்பதியினர்.
70 வயது சஹனாஸ் மற்றும் அவருடைய கணவர் இருவரும் சிறு சிறு தொகைகளாக சேர்த்து இன்று இருவரும் இந்த யாத்திரையை தற்போது நிறைவேற்றி வ்ருகின்றனர்.

ஒருமுறை அவர்களின் மகனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது கூட இந்த தொகையை தொடாமல் வேறு வகையிலேயே பொருளாதார உதவி பெற்று நோயை குணமடைய செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்ல முடிவெடுத்தபோது, தங்களிடம் இருக்கும் சேமிப்பில் உள்ள தொகை போதாது என்பதால் தங்களுடைய சொந்த நிலத்தை விற்பனை செய்து அந்த தொகையில் இந்த புனிதக் கடமையை நிறைவேற்ற வந்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு," எங்களுக்கு வயதாகிக் கொண்டே இருக்கிறது உடல் நிலையும் அடுத்த வருடங்கள் ஒத்துழைக்குமா என்று தெரியாது மேலும் உயிரோடு இருக்கும் இந்த தருணத்திலேயே இப்புனித இடத்திற்கு வந்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இவ்வருடம் இந்த கடமையை நிறைவேற்ற வந்துள்ளோம். இப்பொழுது எங்கள் மகிழ்ச்சிக்கு ஈடில்லை" என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment