Islamic Widget

July 23, 2012

பொது இடத்தில் சிறுநீர் கழித்தால் 100 ரூபாய் அபராதம்



சுற்று சூழலைக் காக்கும் நோக்கில் கேரள அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதன்படி பொது இடங்களில் சிறு நீர் கழித்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து இத்தவறைச் செய்தால், தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பறை மற்றும் சிறுநீர் கழிக்க வசதி செய்து கொடுக்காத பள்ளிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

கழிவு நீரை பொது இடங்களில் திறந்து விட்டாலோ, திறந்த வெளியில் கழிவுகளை வீசினாலோ, குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். நிறுவனங்களில் பெண்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால், 500 ரூபாயும், வாடகைக்கு வீடு  கொடுக்கையில், அடிப்படை வசதி அதில் இல்லாவிட்டால் , 250 ரூபாயும் அபராதமாக வசூலிக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 வீடுகளில் உள்ள கழிப்பறைக் கழிவுகளை ஓடைகளில் திறந்து விட்டால், 500 ரூபாயும், குடி நீர் மற்றும் துணி துவைக்கும் கழிவு நீர் போன்றவற்றை பொது இடங்களில் திறந்து விட்டால், 2,500 ரூபாயும், அபராதமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களிலிருந்து கழிவு நீரை நேரடியாக ஆறுகளில் திறந்து விட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment