Islamic Widget

June 17, 2012

சவுதி இளவரசர் நயீப் உடல் இன்று அடக்கம்: அடுத்த இளவரசர் ஆகிறார் சல்மான் பின் அப்துல் அசிஸ்

மக்கா:சவுதி அரேபியாவின் இளவரசர், துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தவர் நயிப் பின் அப்துல் ஆசிஸ். விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காகவும், மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்காகவும் அமெரிக்கா சென்ற நயீப், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் நேற்று மரணமடைந்தார்.


79 வயதான நயீப்பின் உடல் இன்று காலை ஜெனிவாவிலிருந்து, விமானம் மூலம் சவுதி அரேபியாவின் ஜெடா நகருக்கு கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் சவுதி அரேபியாவின் புனித நகரான மெக்காவில் இன்று இரவு நடைபெற உள்ளது. தனது சகோதரரான சுல்தானின் மறைவுக்குப் பின்னர் பதவிக்கு வந்த நயீப், தான் பதவியேற்ற 8 மதங்களிலேயே தற்போது இதயக்கோளாறால் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயீப் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன், ‘இளவரசர் நயீப், சவுதி அரேபிய பாதுகாப்பிற்காக தன் வாழ்வையே அற்பணித்து விட்டார்’ எனக் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்ட் ஆகியோரும் நயீப்பின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரேபிய நாடுகளில் புகழுடன் விளங்கிய நயீப்பின் இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நயீப்பின் சகோதரரான இளவரசர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சஊத் அடுத்ததாக பட்டத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 76 வயதான சல்மான் தற்போதைய பாதுகாப்பு அமைச்சராக விளங்கி வருகிறார். சல்மான் தான் நயீப்பின் இடத்துக்குப் பொருத்தமானவர் என பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment