சவூதியில் மனைவியை அடித்த கணவருக்கு ஜெத்தாவிலுள்ள நீதிமன்றம் குர்ஆனில் படித்துத் தேர்வு எழுதும் நூதன தண்டனைகளை வழங்கியுள்ளது.
இஸ்லாம் மதம் மனைவியிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது குறித்து கூறும் இரு நூல்களை அந்தக் கணவன் படித்து தேர்வு எழுத வேண்டும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், 30 பகுதிகளில் ஐந்து பகுதிகளையும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளில் நூறையும் மனப்பாடம் செய்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் அந்த நபருக்கு விதித்துள்ளது. இஃதன்றி மனைவியின் உரிமையை மதிக்கத் தவறியதற்காக மனைவிக்கு சுமார் 7,000 ரியால்கள் (1ரியால் = 14 இந்திய ரூபாய்) நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
உறவினரைக் காணச் செல்வது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த கணவன் மனைவியை அடித்ததாக, மனைவி காவலதிகாரிகளிடத்தில் முறையிட்டதையடுத்து, விசாரணை செய்யப்பட்ட போது, மனைவியை அடித்ததாக அந்தக் கணவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

நீதி மார்க்கம் என்றால் அது இஸ்லாம் தான்
ReplyDelete