Islamic Widget

May 14, 2012

விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு

சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானத்தில் இருந்த பயணி ஒருவர் அவசரகால வழியாக தப்பியோட முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூபாயில் இருந்து 307 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து பயணிகள் இறங்க வசதியாக படிக்கட்டுகள் விமானத்தின் அருகில் கொண்டு வரப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒரு அவசர கால வழியைத் திறந்து அதில் சறுக்கி கீழே இறங்கினார். மேலும் அங்கிருந்து தப்பியோட முயன்றார்.

வழக்கமாக அவசரகால வழியைத் திறப்பது என்றால் அதை விமானி தான் திறப்பார். அப்படி இருக்கையில் பயணி ஒருவர் அந்த வழியைத் திறந்தவுடன் அதிகாரிகளும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
தப்பியோட முயன்ற அந்த வாலிபரை விமான நிலைய ஊழியர்கள் விரட்டிப் பிடித்தனர். உடனே இது குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரித்ததில் அந்த பயணியின் பெயர் கமால் பாட்சா(28) என்பதும், அவர் ஒரு என்ஜினியர் என்பதும் தெரிய வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி துபாய் சென்ற அவரின் மனநலம் பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அவரை சிகிச்சை பெற்று வர சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர் விமான நிலையத்திலேயே தப்பியோட முயன்றார் என்பது தெரிய வந்தது.
அவர் நிஜமாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர் தானா என்பதை உறுதி செய்ய மருத்துவர்கள் குழு வரவழைக்கப்பட்டது. அந்த குழுவினர் அவரிடம் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது

2 comments:

  1. பாவம் கமால் பாட்சா, அவருக்கு நம்பர் 2 வந்துயிருக்கும் அடக்கமுடியாம சீக்கிரமா பாத்ரூம் போக அவசரவழியை பயன்படுத்தியிருப்பாரு,(இதுவும் நெ.2 ஒரு அவசரம்தானே)

    ReplyDelete
  2. ஏர் இந்தியா விமானத்தை தள்ளி விட்டாதான் ஸ்டார்ட் ஆகும்னு யாரவது சொல்லி இருப்பாங்க. அதனால்தான் கீழே இறங்கி தள்ளி விட போய் இருப்பாரு.

    ReplyDelete