Islamic Widget

January 31, 2012

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடியாது : இந்தியா மீண்டும் அதிரடி

ஈரானிடமிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதியி ல் ஈடுபடும் எனஇந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவி த்துள்ளார். இரு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் சிகாகோவில் உரையாற்றூகையில் இவ்வாறு தெரிவித் தார்.ஈரான் மேற்கொண்டு வரும் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர் ப்பு தெரிவிக்கும் வகையில் ஈரானிடமிருந்து, பிறநாடுகள் எண் ணெய் இறக்குமதி செய்வதை இடைநிறுத்தி கொள்ள வேண்டு மென ஐ.நா கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே அமெரிக்கா, இங் கிலாந்து உட்பட பல மேற்கத்தேய நாடுகள் ஈரானுக்கு கடும் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. ஐ.நா மற்றும்
ஐரோப்பி ய ஒன்றியமும் இத்தடைகளை அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவால் இவ்வாறு எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக்கொள்ள முடியாது என பிரணாப் முகர்ஜி கூறினார். சர்வதேச அளவில், எண்ணெய் பயன்பாட்டில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு தேவையான எண்ணெயில் 12% வீதம் ஈரானிடமிருந்தே கிடைக்கப்பெறுகிறது. இதனை இந்தியா நிறுத்தினால், அது தமது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என அவர் கூறினார்.

No comments:

Post a Comment