பரங்கிப்பேட்டையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக கடந்த ஓரிரு வருடங்களாக பேசப்படுபவற்றில் ஒன்று படகுத் துறை. பேரூராட்சித் தலைவர் யூனுஸ் முயற்சியில் உருவாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டு வந்த படகுத்துறை முறையான பராமரிப்பின்றி அவ்வப்போது பழுதுபட்டுப் போவது வாடிக்கை. ஆனாலும் வெயில் சாய்ந்த மாலைப் பொழுதில் ஆற்றோரம் அமர்ந்து சற்று மனத் திருப்தியுடன் திரும்பும் இடமாக படகுத் துறையை மக்கள் அனுபவிக்கத் துவங்கி விட்டதால் சிற்சில குறைப்பாடுகளை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
வார இறுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் இடமாக இருந்த படகுத் துறை தானே புயலில் தவித்து தள்ளாடி நாசமாகி கிடக்கின்றது. சுற்றுலாத் தளம் என்று ஆர்வளர்கள் வர்ணிக்கும் இடமான அந்த இடத்தை துரிதமாக சீரமைக்க வேண்டிய கடமை பேரூராட்சிக்கு உண்டு. பொலிவிழந்து கிடக்கும் படகுத்துறை பொலிவூட்டப்பட்டால் வந்து செல்ல ஆர்வமுள்ள மக்களின் மாலைப் பொழுது மகிழ்ச்சியுடன் கழியும்.
நன்றி:pnotimes
மிகவும் தேவையான பதிவு. உண்மையில் இப்படகுத்துறை நம்மவர்களோடு ஐக்கியமான ஒன்று. சம்மந்தப்பட்டவர்கள் துரித நடவடிக்கை எடுத்து சரி செய்ய முயல வேண்டும்.
ReplyDelete--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: http://pnonazim.blogspot.com/