தமிழகத்தில் தானே புயலால் அதிகம் பாதிக்கப் பட்ட பகுதி கடலூர் மாவட்டம். இப்பகுதியை பார்வையிட முதல்வர் ஜெயலலிதா இன்று கடலூர் வந்தார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். பின்பு கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து நிவாரணங்களை வழங்கினார்.
மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய முதல்வர், "புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உரிய நிவாரணமும், உதவிகளும் வழங்கப்படும் இது உங்கள் அரசு நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்" என பேசினார்.
No comments:
Post a Comment