சென்னை: சென்னையில் இருந்து கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது வலுப்பெற்று புயலாக மாறியிருப்பதாகவும் இதனால் காற்று பலமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று கடும் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது. இதையடுத்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்துகடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே 30ஆம் தேதி காலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு "தானே" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கடற்சீற்றம் இருப்பதால் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்றும் வானிலை மைய இயக்குநர் ரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment