Islamic Widget

December 15, 2011

மேற்கு வங்கம்: கள்ளச்சாராயத்துக்கு பலி 101


மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது. 'தெற்கு 24 பர்கானாஸ்' மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் செவ்வாய்க்கிழமை கள்ளச்சாராயம் அருந்தினர்.
அவர்கள் அனைவருக்கும் புதன்கிழமை காலை வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதியுற்ற அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் 57 பேர் பலியானார்கள்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட மேலும் 100 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நோயாளிகளில் 37 பேர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால், கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.

முன்னதாக, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சம்மந்தப்பட்ட மதுக்கடையை அடித்து நொறுக்கினார்கள். இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கொல்கத்தாவில் இருந்து சிறப்பு மருத்துவ குழு அந்த கிராமத்துக்கு விரைந்தது.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று மம்தா   அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment