சிதம்பரம் : தொடர் மழையால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் காய்ச்சலால் அவதியடைந்த மக்கள் சிதம்பரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக திரண்டனர். கடந்த 5 நாட்களாக சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நீர் நிலைகள் நிரம்பின. சிதம்பரம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் விளை நிலங்களும் பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்து தேங்கியுள்ளது.
இப்பகுதிகளில் உருவாகியுள்ள கொசுக்களால் தொற்று நோய் ஏற்படுகிறது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் அவதியடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நேற்று சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் சிகிச்சைக்காக அதிகளவில் திரண்டனர். இது குறித்து சிதம்பரம் தலைமை மருத்துவர் சுகுமாறன் கூறுகையில், "சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சூற்றுப்புறத்தை சூகாதாரமாகவும், கண்டிப்பாக காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும்' என்றார்.

No comments:
Post a Comment