சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கணிசமான அளவு குறைந்துள்ளதையடுத்து, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை இன்று லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில், தொடர்ந்து அதிகரித்து வந்த கச்சா எண்ணெயின் விலை தற்போது குறைந்து வருகிறது. இதன்காரணமாக, நவம்பர் 16ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 அளவிற்கு குறைக்கப்பட்டது. தலைநகர் டில்லியில், தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 66.42 என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்க திட்டமிட்டுள்ளது.
பெட்ரோல் விலையை இன்று குறையும்பட்சத்தில், இம்மாதத்தில் பெட்ரோல் விலை 2வது முறையாக குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதத்தின் இறுதியில், 115.85 அமெரிக்க டாலர்கள் என்ற அளவிற்கு இருந்த கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை, நவம்பர் மாத முற்பகுதியில், பேரல் ஒன்றிற்கு 107 அமெரிக்க டாலர்களாக குறைந்தது. இதனையடுத்து, நவம்பர் 16ம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.22 குறைக்கப்பட்டது.
இருந்தபோதிலும், அக்டோபர் மாதத்தின் இறுதியில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூ. 49.30 என்ற அளவில் இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, நவம்பர் மாத முற்பகுதியில் ரூ. 52 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment