பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் நசுருதீன்(24). இவர் கடலூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து கடையில் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த இந்திரா(20)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட்டனர்.
தனது மகள் காணாதது பற்றி இந்திராவின் தந்தை கடலூர் போலீசில் புகார் செய்திருந்தார். இதையடுத்து நசுருதீன் தான் அவரை கடத்திச் சென்றிருக்க வேண்டும் என கருதிய போலீசார், கடந்த 2 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டைக்கு வந்து விசாரித்தனர். ஆனால் காதல் ஜோடியினர் அங்கு இல்லை.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணியளவில் மப்டி உடையில் வந்த போலீசார், நசுருதீன் இங்கு இல்லை என போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு நசுருதீனின் தாய் அபிதா பேகம், சித்தி பாத்திமாகனி, மற்றும் இவரது கைக்குழந்தை ஆகியோரை ஜீப்பில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
அவர்கள் நீண்ட நேரமாக வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், நேற்றிரவு 9 மணியளவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கேட்டுள்ளனர். ஆனால் அதுகுறித்து அங்கிருந்த போலீசார் எவ்வித விளக்கமும் சொல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நசுருதீனின் உறவினர்கள் இரவு 11 மணியளவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி முனியப்பன், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இச்சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் கேட்டபோது, கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு பஸ் ஸ்டாண்டில் ஒரு விதவை தனியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் தனது கள்ளக்காதலன் வீட்டுக்கு செல்வதற்காக காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பாதுகாப்புக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, விடிந்தவுடன் அனுப்பி வைத்துவிட்டோம். மகளிர் போலீசார் இரவுப்பணியில் இல்லாததால் தான் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைத்தோம் என்றார்.
இதுகுறித்து கவுன்சிலர் பாவா பக்ரூதீன் கூறுகையில், அழைத்துச் சென்றவர்களை பற்றி விசாரிக்க சென்றபோது போலீசார் எங்களை கேவலமாக திட்டினர். போலீஸ் ஸ்டேஷனுக்கு பெண்ணை அழைத்துச் சென்று போலீசார் அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி கூறினால் எங்களை கண்டபடி திட்டுகின்றனர் என்றார்.
பஸ் ஸ்டாண்ட் அருகில் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள டிரைவரும், விடுதலை சிறுத்தைகள் நகர செயலாளருமான ஜமால் முகைதீன் கூறுகையில், கடந்த 3 நாட்களுக்கு முன் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை போலீசார் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் அவரை அழைத்து வந்து வேதாரண்யம் பஸ்சில் ஏற்றி விட்டனர் என்றார்.
போலீஸ் ஸ்டேஷனில் பெண் பாலியல் பலாத்காரம்?
முத்துப்பேட்டையில் பரபரப்பு
No comments:
Post a Comment