ஈரோடு: பெங்களூரூ மடிவாலாவில் இருந்து எஸ்.ஆர்.எம். என்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே குழிழாம்பரப்பு என்ற இடத்தில் 4 வழிச்சசாலையில், முன்புறமாக கோவை நோக்கிச் செசன்ற டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளானது.
இதில், லாரியில் இருந்த விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல், அந்த இடத்திலேயே கொட்டியது.
இதில், தீப்பற்றி பஸ் முழுமையாக எரிந்தது. லாரி சம்பவ இடத்தில் இருந்து எந்த பாதிப்பும் இன்றி சென்று ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் நிறுத்திவிட்டு, லாரி டிரைவர் தப்பித்து போலீஸில் சரணடைந்தார்.
பஸ் டிரைவர் உட்பட பஸ்ஸில் வந்த 7 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகி இறந்தனர். பஸ்ஸில் பயணம் செய்த 16 பயணிகள் பலத்த காயத்துடன் ஈரோடு மற்றும் பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதலுதவிக்குப்பின், கோவை மற்றும் அவர்களது உறவினரகளால் வேறு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
பெட்ரோல் லாரியில் இருந்து எண்ணெய் 4 ஆயிரம் லிட்டர் வரை கொட்டியதால், எந்த பகுதியே மண்ணெண்ணெய் கொட்டிய வாடையால் திணறுகிறது. பஸ்ஸில் பயணம் செசய்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதால், மற்றவர்களை அவர்கள் எளிதில் காப்பாற்றி, பலி எண்ணிக்கையை குறைந்துள்ளனர்.
No comments:
Post a Comment