அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ..)
ismail. riyadh
அன்பான pno.news வாசகர்களே, என்னுடைய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
தந்தை இப்றாகிம் வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை உணர்த்தும் நன்நாள்.
நினைத்துப் பார்க்கையிலே நனைந்துப் போகும் விழிகள்;
காலம் கடந்துப் போனாலும் கனத்துப் போகும் தியாகம்!
இறைக் கொடுத்த வஹிக்கு பலிக் கொடுக்கச் சென்று
வரலாற்றில் பதிக்கப்பட்ட தியாகம்!
பெற்றெடுத்தப் பிள்ளையை விட்டுக் கொடுத்த மாண்பு;துணிந்த போதும் தணிக்கைச் செய்த அல்லாஹ்வின் அன்பு!
வெற்றிப்பெற்றச் சோதனைக்கு இன்னும் ஒரு பெருநாள்;தியாகத்தை நினைத்துப் பார்க்க அறுத்து பலியிடும் திருநாள்!முகம் ஒளிர அகம் மலர வாழ்த்துக்கள் பரிமாற்றம்;
புத்தாடைகளும் இனிப்புகளும் காட்டட்டும் புதுத் தோற்றம்!கசப்புகளைக் கசக்கிவிட்டு;வெறுப்புகளை உமிழ்ந்துவிட்டு முத்தமிட்டு அணைப்போம்.
ismail. riyadh
No comments:
Post a Comment