இந்தியாவில் முஸ்லிம்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்வதற்காக சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்ட சச்சார் தலைமையிலான குழு இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவித்திருந்தது.
மேலும் முஸ்லிம்கள் ஏழ்மையான நிலையில் இருப்பதாகவும் சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த அறிக்கை 2006-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதனை மேற்கோள் காட்டி பல முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு வந்தனர். இதன் பிறகு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. த்ற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது சம்பந்தமாக ஆலோசனைகளை பிரதமர் அலுவலகத்துக்கு மத்திய சிறுபான்மை விவகாரதுறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.
No comments:
Post a Comment