மினா : சவூதியில் உள்ள மினாவில் பக்ரீத் பெருநாள் என்று அழைக்கப்படும் ஹஜ் பெருநாளை ஒட்டி 30 இலட்சம் முஸ்லீம்கள் அரபா மைதானத்தில் இன்று குழுமினர். யாத்ரீகர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முஸ்லீம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹஜ் பெருநாளுக்கு முதல் நாள் சவூதி மினாவில் உள்ள அரபா மைதானத்தில் ஹஜ்ஜூக்கு புனித பயணம் செய்யும் யாத்ரீகர்கள் ஒன்று குழுமுவர். 30 இலட்சம் நபர்களில் இந்தியாவிலிருந்து சென்ற 2 இலட்சம் நபர்களும் அடங்குவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஜ் புனித பயணத்துக்கு வந்த இந்தியர்களில் இது வரை 75 நபர்கள் இயற்கையாக மரணித்து மக்கா மற்றும் மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது அரபாவில் ஒன்று கூடியுள்ள ஹாஜிகள் இன்றிரவை சவூதியில் உள்ள முஜ்தலிபா எனும் இடத்தில் கழித்து பின்பு ஹஜ்ஜின் முக்கிய சடங்குகளில் ஒன்றாகிய ஆடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பார்கள் என்றும் சவூதி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment