புதுடில்லி : உலகின் மிகக் குறைந்த விலையிலான டேப்லட் பிசி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது ரூ.1200 விலையில் கல்வித்துறை விரிவாகத்திற்காக அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறையிலும் இந்த குறைந்த விலை டேப்லட் பிசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகாஷ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறைந்த விலை டேப்லட் பிசி.,க்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ரூ.2276 ஆகும்.
இது மாணவர்கள் நலனுக்காக 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ரூ.1100 முதல் ரூ.1200 வரையிலான விலையில் இந்த டேப்லட் பிசி.,க்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக ஒரு லட்சம் பிசி க்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் 10 லட்சம் பிசி.,க்கள் ஆர்டர் செய்யப்பட்டு ரூ.1750 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கபில் சிபில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment