Islamic Widget

October 06, 2011

இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகம் செய்ய ‌ஹோண்டா திட்டம்


சென்னை : இந்தியாவில் டீசல் கார்களை அறிமுகம் செய்ய ஜப்பானிய ஆட்டோ துறை நிறுவனமான ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாற்று வாகனங்களின் தேவை அதிகரித்து வருவதால் டீசல் கார் அறிமுகம் செய்யும் முடிவு மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானில் டீசல் என்ஜின்களை தயாரிக்கும் பணியில் ஹோண்டா நிறுவனம் இறங்கி உள்ளதாக ஹோண்டா ஷியல் கார்களின் இந்திய துணை தலைவர் ஞானேஸ்வர் சென் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் டீசல் வாகனங்கள் அதிகரித்து வருவதும் இதற்கு ஓர் முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment