Islamic Widget

October 12, 2011

சவூதி: வாயுக் குழாய் வெடித்து நான்கு தொழிலாளர் காயம்


சவூதி: தம்மாம் நகரில் உள்ள இரண்டாவது தொழிற்பேட்டையில், குளிர்பானங்களுக்கான தகரடப்பாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
அத் தொழிற்சாலையில் ‘வாயுக் கசிவு’ இருந்ததால், தொழிலாளர்கள் சிலர் அதனை சரிசெய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வாயு வெடித்து வெளிப்பட்டதால், மூன்று இலங்கைத் தொழிலாளர்களும், ஒரு இந்தியத் தொழிலாளரும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சரத் அனில், அனில், லயோனல் என்கிற மூன்று இலங்கைத் தொழிலாளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், கண்பார்வை பாதிக்கப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கரீம் என்கிற மற்றொரு தொழிலாளர் நிலை ஒருவாறாக முன்னேற்றமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அத்தொழிற்சாலை அனைத்துவித பாதுகாப்பு ஏற்பாடுகளுடனே இருந்தது என்றும், பதினைந்து வருடத்தில் இதுவே முதல் விபத்து என்றும் அத் தொழிற்சாலையின் மனிதவளப் பிரிவு மேலாளர் அஹ்மத் அல்கிலைகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “தொழிலாளர்களை பாதுகாப்பதே எங்கள் முதல்வேலை” என்றார் அவர்.
இதற்கிடையில், இந்த வாயுக் கசிவின் பரவல் அந்தப் பகுதிகளில் உணரப்படுவதால், அப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராக்காவில் உள்ள,இந்திய தூதரகப் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

No comments:

Post a Comment