Islamic Widget

April 11, 2011

திமுக எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வில் இணைந்தார்!

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கடலூர் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், இன்று அதிமுகவில் சேர்ந்தார்.திமுக சார்பில் கடலூர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், இந்தமுறையும் தனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்தார்.
ஆனால், இள.புகழேந்தி என்பவருக்கு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.இதனால் அதிருப்தியடைந்த ஐயப்பன், போட்டி வேட்பாளராக கடலூரில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், இரு தினங்களுக்கு முன்னர் திமுக அவரை கட்சியில் இருந்து நீக்கியது.இந்நிலையில் இன்று அவர் போயஸ் தோட்டத்திற்குச் சென்றார். அப்படியே அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்

No comments:

Post a Comment