அமெரிக்க, இங்கிலாந்து கூட்டுப்படையினரின் விமானத்தாக்குதலில் லிபிய அதிபர் முஅம்மர் கடாபியின் மாளிகை தரமட்டமானது.துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ஆப்பிரிக்க நாடான லிபியாவிலும் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. மக்களின் போராட்டத்தை ஒடுக்க கடாபி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார்.அதேபோன்று அமெரிக்காவின் கூட்டு படைகள் திரிபோலி, மிஸ்ரதா நகரில் கடாபியின் ராணுவ நிலைகளின் மீது ஏவுகணைகளை வீசின. அதில் போர் விமானங்கள் தீப்பிடித்து எரிந்தன.கடாபியின் அதிகார மையமாக திகழ்ந்து வந்த அவரது அடுக்கு மாடி வீட்டைக் குறி வைத்து ஏவுகணைகளை வீசி தாக்கினர். அதில் கட்டிடம் தகர்ந்து தரைமட்டமானது. முன்னதாக கடாபியைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கக் கூட்டுப்படையினரின் தாக்குதலில் பலர் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. அமெரிக்க தாக்குதலிலிருந்து கடாபியைக் காப்பாற்ற அவரது ஆதரவாளர்கள் மனித கேடயமாக இருந்து செயல்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment