பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானியை சந்திக்க அவருடைய மனைவி சூபியாவுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கடந்த 2005ஆம் ஆண்டில் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்துக்கு புறப்பட்ட தமிழக அரசுப் பேருந்து துப்பாக்கி முனையில் கடத்தி எரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் மதானியின் மனைவி சூபியா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 10ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சூபியா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வாரத்துக்கு ஒருமுறை எர்ணாகுளம் காவல் நிலையத்தில் முன் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும், எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை சூபியாவுக்கு மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) நீதிமன்றம் விதித்துள்ளது.இந்த நிலையில் பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் மதானியை சந்திக்க அனுமதி கோரி கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் சூபியா மனு தாக்கல் செய்தார். இதை நீதிபதி விஜயகுமார் விசாரித்தார். மதானியை சந்திக்க பெங்களூர் செல்ல சூபியாவுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் மார்ச் 18ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவி்ட்டார்.
No comments:
Post a Comment